சென்னை:அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ்,ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்கி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என உத்தரவிடக் கோரி சசிகலா,டிடிவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோரை கட்டுப்படுத்தும் என உத்தரவிட வேண்டும் என்றும்,மேலும்,அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து,சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அதன்பின்னர்,இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது,அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோர முடியாது எனவும்,அதிமுக கட்சியும்,சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி,இருதரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,இன்று இந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.இதனிடையே,அமமுக கட்சியை தொடங்கியதால் டிடிவி தினகரன் வழக்கில் இருந்து விலகிய நிலையில் சசிகலா மட்டுமே வழக்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…