பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான் என் வாழ்நாளின் மகிழ்ச்சி-முதல்வர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். உள்ளாட்சி அமைப்புகளில் 50%-க்கும் அதிகமான பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது.
கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி. அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025