சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை – மகளீர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஏற்காடு வாழவந்தியை சேர்ந்தவர் துரைசாமி. இந்த இளைஞர் கடந்த 2014-ம் ஆண்டு, 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சேலம் மாவட்ட மகளீர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 வருட சிறை தண்டனை மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.