மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் , மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.எனவே தமிழக அரசு ,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்கள் இந்த மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.இதன்படி ஏப்ரல் மாத பொருட்களும் வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025