தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது

Dharmapuram adheenam: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.

Read More – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆதீனம் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அதை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவானது செய்யப்பட்டது.

Read More – பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி ஆகோரம் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவர் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்