செருப்பு விவகாரம்: வயது காரணமாக கீழே குனிய முடியவில்லை -முதலமைச்சர் விளக்கம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த சம்பவம் நடக்கும் போது உடன் இருந்தனர்.
அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார் அந்த விளக்கத்தில், என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், வயது காரணமாக கீழே குனிய முடியாததால், சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே கூறியுள்ளார், வருத்தமும் தெரிவித்துவிட்டார், இதை ஊடகங்கள் பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025