மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். – உச்சநீதிமன்றம் விமர்சனம்.
தென்பெண்ணை ஆறு குறுக்கே அணை கட்டும் விவகாரம், கர்நாடக மாநிலத்துடனான நீர் பங்கீடு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது.
இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஆனால் 2020க்கு பிறகு அந்த கூட்டம் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியது.
இதனை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். என காட்டாக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
பின்னர் விளக்கம் அளித்த மத்திய அரசு, இது குறித்த தீர்ப்பாயத்தை அமைப்பதாக கூறியது. அதன் பிறகு இன்னும் 4 வார காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை டிசம்பர் 14 அன்று ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…