குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்! விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.!
புதுக்கோட்டையில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
புதுக்கோட்டை இறையூரில் குடிக்கும் நீரில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விரிவான அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடிக்கு, மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சண்முகம் என்பவர், தீண்டாமை தொடர்பாக தொடர்ந்த புகாரில், வழக்கை விசாரித்து விரிவான அறிக்கை தருமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பிப்-2ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 33க்கும் மேற்பட்ட கிராமங்களில் மற்றும் 49க்கும் அதிகமான கோவில்களிலும் இது போன்ற சாதி வேறுபாடு பார்க்கப்படுகிறது எனவும், 29 தேநீர் கடைகளில் இரண்டு விதமான தேநீர்குவளைகள் பயன்படுத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.