நரபலி விவகாரம்; தமிழக பெண்ணின் உடல் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை – அன்புமணி ராமதாஸ்

Default Image

கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

கேரளா மாநிலத்தில் நரபலி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் என தமிழக பெண் உள்பட 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி கொடுக்கப்பட்டார். தோட்ட வேலைக்கு சென்ற பத்மா கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மந்திரவாதி உள்ளிட்ட நரபலியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.

இந்த நிலையில், கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பதிவில், கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க கேரள அரசு மறுக்கிறது. இறந்த முன்னோரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து கண்ணியமாக வழியனுப்பி வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை நிறைவேற்ற உதவும் வகையில் பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்