புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டியில் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவவத்தை புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளணுர் பகுதி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விரைந்து குற்றவாளிகளை கண்டறிய வவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இதனை அடுத்து நேற்று , காவல் துறை சார்பில் வெளியிலாக தகவல் குறிப்பில், இதுவரை 80 க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யவும் இந்த வழக்கை காவல் துறையினரிடம் இருந்து சிபிசிஐடி துறையினருக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி, இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை சிபிசிஐடி விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…