NTK Leader Seeman - Kalaignar Karunanidhi [File image]
சென்னை: அவதூறு பேச்சின் ஆதித்தாய் திமுக தான் என்றும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறிய பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் சீமான் இன்று செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுக பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அப்போது குறிப்பிட்ட பட்டியலினம் பற்றி குறிப்பிட்டதாக கூறி, திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அவதூறு புகார் பதியப்பட்டது. பின்னர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அடுத்த நாளே, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். இதற்கு திமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்தன. சீமானுக்கு எதிராக திமுகவினர் போராட்டங்களையும் நடத்தினர். மேலும் சென்னை காவல் ஆணையரிடத்தில் அவதூறு புகாரும் சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அவதூறு புகார்கள் தொடர்பாக இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் குறிப்பிட்ட கருத்தில் சாதிப்பெயர் இருக்கிறது என்று கூறியவுடன், நங்கள் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம்.
ஆனால் “சண்டாளர்கள்” எனும் சொல்லை கலைஞர் கருணாநிதிதான் அதிகம் பயன்படுத்தி இருந்தார். சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகையில், ” எந்த சண்டாளர்கள் இந்த திட்டத்தை தடுத்தார்கள்.” என்று கூறினார். “அண்ணா மீது பட்டை பூசும் சண்டாளத்தனத்தை பொறுத்துகொள்ள மாட்டோம்.” என்று குறிப்பிட்டார். பராசத்தி படத்தில் வசனம் எழுதும் போதும் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். கந்தசஷ்டி கவசத்தில் கூட சண்டாளர்கள் எனும் சொல் வருகிறது.
நீங்க எஸ்சி தானா என கேட்கும் போது வலிக்கவில்லை.? கோவிலுக்குள் விடாத போது வலிக்கவில்லை.? தகுதியால் நீதிபதியானால், அது நாங்க போட்ட பிச்சை என ( திமுக அமைப்பு செயலாளர் ) ஆர்.எஸ் பாரதி சொல்லும் போது வலிக்கவில்லை. ஆனால் இப்போது நாங்கள் கூறிய போது தான் அது சாதிப்பெயர் என தெரிகிறது.? அவதூறு பேச்சுக்களின் ஆதித்தாய் திமுக தான்.
கலைஞர் பற்றிய அவதூறு பாடலை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போ இதே திமுகவினர் எங்கே போனார்கள்.? நான் அங்கிருந்து (திமுக) தான் வந்திருக்கிறேன். எல்லாம் உங்களிடத்தில் கருக்கொண்டது தான். உங்க யூ-டியூபர்கள் பேசுவதை நீங்கள் கேட்டுள்ளீர்களா.? அவர்கள் எங்களை திட்டும் போது உங்களுக்கு தேன் வந்து பாயுது. நாங்கள் பேசினால் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா.? என்று அவதூறு புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று தனது கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…