3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தான விவகாரத்தில் தீர்வு காணப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தான விவகாரத்தில் தீர்வு காணப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை , திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தான விவகாரத்தில் தீர்வு காணப்படும் எனவும், அங்கீகாரம் ரத்து தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025