“விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்”…தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பேட்டி!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறியுள்ளார்.

MamthaKumari

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் இன்று 2வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ” மாணவிக்கு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும், எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள், அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். 

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களிடம் தேவையான விவரங்களை நாங்கள் கேட்டு அறிந்தோம். தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து பேசினோம், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த மோசமான சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு  உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிராக என்ன குற்றங்களை யார் செய்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” எனவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்