ரப்பர், பால் வெட்டும் தொழிலாளியின் அசத்தலான கண்டுபிடிப்பு! பெடலை மிதித்தால் போதும் கை கழுவி விடலாம்!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடையாலுமூடுவை சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான பாபு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.
இவர் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தில், ஒரு பக்க பெடலை மிதித்தால் கை கழுவும் திரவமும், மறுபக்க பெடலை மிதித்தால் தண்ணீரும் வரும். இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம், கைகளால் இயந்திரத்தை தொடாமல், நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து பாபு கூறுகையில், இதன் மூலம் நோய் தொற்றை தடுப்பதுடன் மட்டுமில்லாமல், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். மேலும், பொது இடங்களில் இவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.