புதுமைப்பெண் திட்டம்.. ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Default Image

புதுமைப்பெண் போன்ற ஏரளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் தான் ராமாமிர்தம் அம்மையார். 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாருடன் இணைந்து புரட்சியை நடத்திக்காட்டியவர் ராமாமிர்தம் அம்மையார்.

புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறைந்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை. ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை. புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர்கள் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும்.

தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன். மாணவர்களை வளர்த்தெடுக்கவே நானும், அரசும் உள்ளோம். கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி. என் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் மாணவிகளுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்.

மகள்களை படிக்க வைக்க காசு இல்லையே என்ற கவலை பெற்றோருக்கு இருக்கக்கூடாது. தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும். அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. பணம் இருப்போருக்கு ஒரு கல்வி, இல்லாதோருக்கு ஒரு கல்வி என்பதை போக்கவே தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 26 பள்ளிகள் ரூ.171 கோடி மதிப்பில் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி கவனமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து, ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு இருக்கிறேன். மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 முறையாக பயன்படுத்த வேண்டும். புதுமைப்பெண் போன்ற ஏரளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று தெரிவித்து, மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும்  முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்