இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் – கனிமொழி ட்வீட்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 9, 2020