#Breaking:நாளை இல்லை…நவ.30 ஆம் தேதிதான் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் -வானிலை ஆய்வு மையம்!
தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாமதமாக நவ.30 ஆம் தேதிதான் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அவ்வாறு,உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.