வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில்,வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பின்னர்,இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை,தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன்காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த மாதத்தில் உருவாகும் 3 வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…