பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிப்பு…ஸ்டாலின் ட்வீட்டரில் கருத்து…!!
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளில் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் , திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , பாசிச பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் , கூட்டாட்சி அமைப்பையும் , ஜனநாயகத்தையும் காக்கும் பொருட்டு மம்தா பானர்ஜியுடன் துணை நிற்போம் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
The independence of every institution has been compromised under this fascist BJP Government.
I stand with @MamataOfficial Didi in her fight to protect the federal structure of this country and to save democracy.#SaveDemocracy
— M.K.Stalin (@mkstalin) February 3, 2019