வருமானவரித்துறை சோதனை வாரம், வாரம் நடக்கும் – அமைச்சர் ஏ.வ.வேலு

நேற்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே வருமானவரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ள நிலையில், நாளை வரை இந்த சோதனை தொடரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வருமானவரித்துறை சோதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், தொடர்ந்து மாத மாதம் அல்லது வார வாரம் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. அவர்களை கேட்டால் இது எங்கள் பணி என்று கூறுவார்கள். ஆனால், அரசியல் நடத்தும் நாங்கள் இது பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுகிறது என்று தான் சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025