Income Tax Department - AV Velu [File Image ]
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீதான வரி எய்ப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சரின் வீடு, அலுவலகம் , அமைச்சரின் உறவினர் வீடு அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வருமான வரித்துறை சோதனையானது நேற்று காலை 7 முதல் துவங்கியது. சென்னையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அருணை கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், அறக்கட்டளைகள் என சோதனை நீண்டது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? – சு.வெங்கடேசன் எம்.பி
அமைச்சர் மகன் கபிலன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நேற்று காலை முதல் தொடங்கியது. நேற்று துவங்கிய இந்த வருமானவரித்துறை சோதனையானது இன்று 2வது நாளிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருகிறது.
நேற்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை இன்று 20 இடங்களில் தொடர்கிறது. திருவண்ணாமலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்றும் வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது. உறுதியான தகவலை வருமான வரித்துறையினர் சோதனை விவரங்கள் நிறைவு பெற்றதும் அதிகாரபூர்வமாக அறிவிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…