தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை.!

Tamilnad Mercantile Bank

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிராதான வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகும். தூத்துக்குடி வி,இ.ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் அங்கு வங்கி அதிகாரிகள் தவிர வங்கியில் கணக்கு வைத்திருப்போர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்