#Breaking:நடிகர் விஜயின் உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னை:நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் செல்போன் நிறுவனம்,உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில்,தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வருமானத்தை மறைத்து கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சீன நிறுவனமான xiaomi செல்போன் நிறுவனத்தை சேவியரின் நிறுவனம் கையாளுவதால்,சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025