கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த சம்பவம்..! 3 மணி நேர விசாரணைக்கு பின் மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு…!

Published by
லீனா

கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல்.

கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்,  கோபிநாத் என்பவர்  வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார்.

அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி என்பவர், இப்படி நடந்து கொள்ளாதீர்கள், மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமியை அவரது சாதி பெயரை கூறி மிரட்டியுள்ளார். உங்களுடைய பணியை எப்படியாவது காலி செய்து விடுவேன், உங்களால் ஊரில் இருக்க முடியாது என கூறி காலில் விழுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த முத்துசாமி கோபிநாத் காலில் விழுந்துள்ளார். அப்போது கோபிநாத் மன்னித்து  விட்டதாகவும், தனது மீதும் தவறு இருப்பதாகவும் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பல தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கோவை ஆட்சியர் சமீரன் தெரிவித்திருந்த நிலையில், ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் இருதரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by
லீனா
Tags: enquiryVAO

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago