பரபரப்பு.! கல்லூரி மாணவி வெட்டி கொலை.! காதல் விவகாரமா.? போலீஸ் தீவிர விசாரணை.!
விழுப்புரம் மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் பகுதியை சேர்ந்ததை கல்லூரி மாணவி தரணி என்பவர் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் விழுப்புரம் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஆவார்
இன்று காலை அவரது வீட்டிலேயே மர்ம நபர் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே மாணவி தரணி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவமானது காதல் விவகாரத்தால் நடந்ததா என காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.