கடலூரில் அதிர்ச்சி சம்பவம் ..!இபிஎஸ் வேதனை…!

Default Image

கடலூரில்,ஆக்சிஜன் வெண்டிலேட்டரை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக அகற்றியதால் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக, பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் வேதனை அளிக்கிறது,என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவர் கொரோனா தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால்,கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,கொரோனா நோயாளி ராஜா காலை உணவு அருந்த சென்றபோது,அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டனர்,அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவி கஸ்தூரியை தடுத்துவிட்டு அதனை எடுத்துச் சென்று விட்டனர். இதனால்,ராஜா மூச்சு திணறி இறக்கும் நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.எனவே,தனது கணவரை காப்பாற்றுமாறு ராஜாவின் மனைவி அழுதபடியே கேட்டுகொண்டிருக்கும் போதே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்து கூறியதாவது,”மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்ததுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்”,என்று பதிவிட்டிருந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்