சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி (வியாழன்) அன்று துவங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விநேரம், விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் துறைகள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இன்று விளையாட்டுத்துறை சார்பில் பேசிய அத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட , செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு அறிவிப்புகளை குறிப்பிட்டார். அதில், கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு அப்போது சிறப்பு ஊக்க தொகையாக 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த முறை, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை சிறப்பு ஊக்கத்தொகை 7 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், 2 கோடி ரூபாய் செலவீட்டில் சர்வதேச செஸ் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. இதனால் தமிழக வீரர் குகேஷ் இளம் வயதில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டார். மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களுக்கு அரசுத்துறை, அரசு பொதுத்துறையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் 7 வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் 10 கோடி ரூபாய் செலவில் சென்னை ராதாகிருஷ்ணன் உள்ளரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா சென்னையில் நடத்த 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க 355 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 9 சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் பன்னாட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்காக தற்போது இடம் பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்தாண்டுக்குள் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ... சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…