சென்னை:15 – 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்த பின்னர், தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும் எனவும், ஆனால்,அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது. எனவே,கட்டாயம் அதை அணிய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று முதல் (ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து) 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் இணையதளத்தில் நேற்று முன்தினம் முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும்,ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாடு முழுவதும் இன்று காலை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,தமிழகத்தில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்:”தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும்.ஆனால்,அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது.நீங்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கில் இதை கூறவில்லை.மாறாக,அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிவுறுத்துகிறேன்.அதுதான் என் மனதிற்கு மகிழ்ச்சி.
மேலும்,ஒமைக்ரான் என்ற புதிய தொற்று,புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது.ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதன் காரணத்தால் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருந்த நமது பயணம் தடைபடும் சூழல் நிலவுகிறது. எனினும்,முந்தைய கொரோனா வைரஸை விட ஒமைக்ரானின் நோய் தாக்கம் குறைவுதான்.
எனினும்,தடுப்பூசி செலுத்துங்கள் என அன்போடு,பணிவோடு, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில்,தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவு.எனவே,புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம்.நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்க வேண்டும்,அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…