வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது – கமல் ஹாசன்
வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நேற்று 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 4,163 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
போதுமான வசதிகள் இல்லாத
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது.— Kamal Haasan (@ikamalhaasan) July 11, 2020