கள்ளகாதலிக்கு கஞ்சா கொடுத்து உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கணவன்!
கள்ளகாதலிக்கு கஞ்சா கொடுத்து உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜவகர்லால் தெருவினை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தான் காமாட்சி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது, ரவிச்சந்திரன் ஆக்டிங் டிரைவராக வேலை செய்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க முடிவதில்லை. ரவிச்சந்திரன் வெளியில் வேலைக்கு சென்றதும் காமாட்சி அவரது அம்மா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தினேஷ் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர், கள்ளகாதலியான காமாட்சிக்கு கஞ்சாவை கொடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் அறிந்து ரவிச்சந்திரனும் காமாட்சியின் தாயாரும் கண்டித்து உள்ளனர், ஆனால் அதை காமாட்சி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ரவிச்சந்திரன் வேளைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, தினேஷுடன் காமாட்சி ஒன்றாக இருந்ததை பார்த்த அவர், ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் தினேஷை கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவர், காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். விசாரித்த காவலர்கள் ரவிச்சந்திரனுடன் சேர்த்து, காமாட்சி அவரின் தாயார் என மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.