சென்னை மாவட்டத்தில் தனது மனைவியை கடிக்க வந்த நாயை ஆத்திரத்தில் அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி குப்பை தொட்டியில் வீசிய கணவர்
சென்னையில் வசித்து வந்தவர் துரைராஜ் இவர் சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தின் அருகில் மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இவர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் வீசியுள்ளார்.
மேலும் அவர் நாயை கொன்றது, ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு ஒருவர் புகார் அளித்துள்ளார், இந்நிலையில் புகாரின் பேரில் ப்ளூ கிராஸ் மேலாளர் வேலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இதனையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் விலங்குகள் துன்புறுத்தும் சட்டத்தின் மீது 1990 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவரை காவல்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது ஏதற்காக நாயை அடித்து கொன்றாய் என்று காவல்துறையினர் கேட்டனர் அதற்கு துரைராஜ் எனது மனைவியை அந்த நாய் கடிக்க வந்ததால் நான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாய் கொன்று வீசிய இடத்தைத் போலீசார் துரைராஜிடம் கேட்டனர் பின் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கைது செய்யப்பட்ட துரைராஜிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…