திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்…! ஜவாஹிருல்லா
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் . 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சியினர் பரப்புரை செய்வார்கள் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.