கலாஷேத்ரா பாலியல் வழக்கு.! மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை.! ஜாமீன் மனுவும் இன்று விசாரணை.!

Default Image

கலாஷேத்ரா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று முதல் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹரி பத்மன் கைது :

மாணவிகளின் போராட்டத்தை தொடருந்து, கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேர் மீது மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இன்று விசாரனை :

இதில், ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மனிதஉரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. 6 வார காலத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.

முன்ஜாமீன் மனு :

இந்நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹர் பத்மன் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்