மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.!
மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல் தான் இருக்க முடியும் என்றும் சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் இடம் ஏதும் மிச்சம் வைத்திருக்கிறீர்களா? எனவும் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கருத்து கூறியுள்ளார்.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.