இன்று முதல் வீடு தேடி ரூ.1000 வழங்கப்படும்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் வீடுகளுக்கே வந்து ரூ.1000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 200 கார்டுகளுக்கு பணம் வழங்கப்படும். இன்று முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அனைத்து அட்டைதாரர்களின் வீட்டிற்கே வந்து ரூ.1000 வழங்க உள்ளனர்.
காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பணம் வழங்கப்படும். பணம் வாங்க விடுபட்டவர்கள் 29, 30-ம் தேதிகளில் பணத்தை ரேஷன் கடைகளில் பெறலாம்.