நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வீடு உடனடியாக ஒதுக்க வேண்டும்- திருமாவளவன்

Default Image

நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை உடனடியாக ஒதுக்கித் தர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.இந்த மனித நேயமற்ற செயல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களால் இந்த விவகாரத்திற்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,

கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசின் குடியிருப்பில் குறைந்த வாடகையில் குடியிருந்த வந்த அவருக்கு  எந்தவொரு இடத்தையும் வழங்கமால் இடம் பெயரச் செய்தது தவறானது . நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கு சொந்தக்காரருமான நல்லகண்ணுவுக்கு, அரசு சார்பில் வீடு ஒன்றை உடனடியாக ஒதுக்கித் தர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்