மருத்துவமனையில் கவலைக்கிடமாக அன்பழகன்.!

- கடந்த 24-ம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- வரின் உடல்நிலை கவலைக்கிடடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 24-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமும் , நேற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகன் பார்த்து அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இந்நிலையில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரின் உடல்நிலை கவலைக்கிடடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல்நிலை
குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025