இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகமது மும்தசீர் (20) தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர்.இவர் மயிலாடுதுறையில் உள்ள கல்லூரில் படித்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதேசமயம் இவரது நண்பர் நியாஸ் அகமது என்பவரும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.
அந்தப் பெண் முகமது மும்தசீருடன் பழகி வந்துள்ளார். இதனால் பொறாமை அடைந்த நியாஸ், மும்தசீர் மீது மனதுக்குள் கடும் ஆத்திரத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நியாஸ் அகமது தனது நண்பனின் பிறந்த நாளுக்கு செல்லலாம் என மும்தசீருவை திருவிடைமருதூர் அழைத்துச்சென்றுள்ளார் . அங்கு சென்றதும் அங்கிருந்த தனது நண்பர்கள் முகமது ஜலீல் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து மும்தசீரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூன்று பேரும் மும்தசீரை கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த கொலையை திசை திருப்ப திட்டமிட்ட அந்த மூன்று பேரும், மும்தசீர் செல்போனில் இருந்து அவரது தாய்க்கு போன் செய்து ,மும்தசீரை கடத்திக்கொண்டு கோவை செல்வதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவோம், இல்லையென்றால் கொன்றுவிடுவோம் எனக் கூறியுள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த தாய் மற்றும் அவரது உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் மும்தசீர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், மூன்று பேரையும் டிராக் செய்து கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தையும் பதிவு செய்து கொண்டனர். காதல் பொறாமையில் நண்பரை, சக நண்பரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…