மின்வெட்டால் தான் திமுக ஆட்சியே பறிபோனதையெல்லாம் மாண்புமிகு முதல்வர் நன்கறிவார் – ஓபிஎஸ்

Published by
லீனா

தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க திமுக அரசு தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை. 

தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு ஏற்படுவதை காணும்போது, திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது தெளிவாகிறது. எனவே மின்வெட்டை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கே அடிக்கடி மின் வெட்டு இருந்ததையடுத்து, கடந்த 18-04-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதுகுறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சரும் தனது பதிலை அளித்தார்கள்.

இந்த விவாதம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், 20-04-2022 தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதாகவும், திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே மின்சார விநியோகம் தடைபட்டு வந்த நிலையில், 20-04-2022 அன்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதில் அப்பகுதி மக்களுக்கும், மின்சார ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மின்வாரிய அலுவலகமே சூறையாடப்பட்டதாகவும். மின்சார ஊழியர் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

21-04-2022 அன்று இரவு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு அனகாபத்தூர், பம்மல், தாம்பரம் போன்ற பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 21-04-2022 அன்று இரவு திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆரணியில் மின் வாரிய அலுவலகத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

தற்கு பதிலளிக்கும் வகையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக 1,050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மெகாவாட் 420 மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும். மத்திய அரசு சரியான முறையில் நிலக்கரி வழங்காததன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்த நிலையில், 18-02-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தற்போது வரை மின் தடை இல்லை என்றும், எந்தக் காலத்திலும் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பேசியிருக்கிறார். பேசி முடித்த இரண்டாவது நாளே மின்வெட்டு ஏற்பட்டு, அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முடிந்து இருக்கிறது. அப்படியென்றால், கள யதார்த்தம் தெரியாமல் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பதில் அளித்து இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

நிலக்கரி பிரச்சனை என்பது சென்ற ஆண்டிலிருந்தே இருந்து வருகிற ஒன்றாகும். இதுகுறித்து நான்கூட அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அப்பொழுதே, கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், மின் வெட்டு வந்தவுடன், நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க 4.80 இலட்சம்டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறுகிறார். எப்போது ஒப்பந்தப்புள்ளி முடிந்து, எப்போது நிலக்கரி தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களை வந்தடைவது? அதுவரை மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறாரா?

மின் வெட்டினால் தி.மு.க. ஆட்சியே பறிபோனது என்பதையெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுபென்றும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Recent Posts

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

38 minutes ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

1 hour ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

2 hours ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

3 hours ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

3 hours ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

4 hours ago