தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் – அமித் ஷா
உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசிய பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் பேசுகையில்,உலகத்தின் தொன்மையான மொழி தமிழ். பழைமையான தமிழ் மொழியில் பேச இயலாமைக்கு வருந்துகிறேன். தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் ,அவர் ஹிந்தியில் பேசியது தமிழில் மொழி பெயர்ப்பாளர் கொண்டிமொழி பெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.