4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை..ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல்
நெல்லை தூத்துக்குடி இடையே பாலம் சேதமடைந்து 100 நாட்களை கடந்தும் சரிசெய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் .
நெல்லை,தூத்துக்கடி இடையே 4 வழிச்சாலை அமைக்க கடந்த 2004-ஆம் ஆண்டு திட்டமிட்டது அதன் படி 32 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ஒப்பந்தகாரர் பாதியில் நிறத்திவிட்டு சென்றதால் கூடுதல் திட்ட மிதிப்பீடு தயாரிக்கபட்டு 2010 ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் பாதியில் நிறுத்தபட்ட தாமிரபரணியின் குறுக்கே 2 பாலங்கள், சாலைகள் 320 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடியிலிருந்து நெல்லை வரும் வழியில் உள்ள பாலம் கான்கீரீட் கீறல் விட்டு ஓட்டை விழுந்தது.அந்த ஓட்டை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணயைத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரே பாலத்தில் இரண்டு வழி போக்குவரத்து தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த பாலம் சேதமடைந்து 100 நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யும் வேலைகளும் இன்னும் தொடங்கப்படவி்ல்லை. இதனால் ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவை எல்லாத்துக்கும் மேலாக அந்த பாலம் புழக்கத்திற்கு வந்து சிறிது காலங்களிலே பயன்படுத்த முடியாத நிலையில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் புதிய பாலங்களின் அருகே 100 ஆண்டை கடந்த பழைய பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.