வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி!

Default Image

பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்டார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி.

பாகப்பிரிவினை வழக்கு ஒன்றின் குறுக்கு விசாரணையின்போது பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் மேல் முறையிட்டு வழக்கறிஞர் கேள்வி கேட்டுள்ளார். வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பரத சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்டார்.

3 பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும் அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடந்ததால் அதற்காக உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்கோ, அவர்களை மன ரீதியில் காயப்படுத்துவதற்கோ குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தங்கள் உரிமைக்காக நீதிமன்றம் நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்