அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கிற்கு , இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.
இதனிடையே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ,மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழக அரசு பதிலளிக்க 15 நாள் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…