கோவையில் செங்கல் சூளையில் செங்கற்களை எடுக்க உயர்நீதிமன்றம் தடை.!
கோவை தடாகம் பகுதியில் தடைவிதிக்கப்பட்ட செங்கல் சூளைகள் செங்கல்களை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
யானைகள் வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோவை தாடகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்தன. அதனை மீறியும், சுங்கத்துறை அதிகாரி அனுமதியோடு செங்கல் சூளைகள் செயல்பட தொடங்கின.
இதனை எதிர்த்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவு படி செங்கல் சூளைகள் செயல்பட கூடாது எனவும், சுங்கத்துறை அதிகாரி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவில் கூறப்பட்டது.
இதனை அடுத்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் சார்பில், செங்கல் சூளையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செங்கல்களை எடுக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தடைவிதிக்கப்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல்களை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.