சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உள்ள 110 கிரவுண்ட் நிலமானது தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலமானது அரசுக்கு சொந்தம் என அதனை அரசு மீட்க தொடர் நடவடிக்கையை 1989ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.
தோட்டக்கலை சங்கம் : இதில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு, தனி ஒருவர் உத்தரவின் பெயரில் நிலத்தை மீட்க கூடாது என தோட்டக்கலை சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செம்மொழி பூங்கா : இந்த வழக்கு உத்தரவில் முதலில் ஒரு பங்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதில் தான் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பிறகு மீதம் உள்ள நிலமும் கையக படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலம் அரசுக்கே சொந்தம் : இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் மேல்முறையீடு செய்தது. இதனை அடுத்து, அரசுக்கு சொந்தமான 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் படி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலம் அரசுக்கே சொந்தம் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…