திருப்பரங்குன்றம் தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு தடை.? மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு தடை விதிக்க கோரிய கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி நெல்லி தோப்பில் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில், திருப்பரங்குன்றம் நெல்லிதோப்பு மலை பகுதியில் தான் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பக்த்ர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அங்கு தொழுகை நடத்த தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரை மணிநேரம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால் ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை என குறிப்பிட்டு, தொழுகைக்கு தடை விதிக்க முடியாது என கூறி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.