நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

nanthini - cm

எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதல்வர் ட்வீட். 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது.

இந்த தேர்வில், 12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘”கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் “படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்” எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என பதிவிட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்