மக்களே…வெயில் கொளுத்தும்…வெளியே வரவேண்டாம்…வானிலை மையம் எச்சரிக்கை.!

Default Image

 தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. 

வெயில் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். எனவும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே, முதியோர் வீட்டை வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளது. தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும்.

மழைக்கு வாய்ப்பு 

மேலும், வரும் 20-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்