மெரினாவில் பேனா நினைவு சின்னம்.., மத்திய அரசு அனுமதி… உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை.!  

Pen statue and Supreme Court

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஜூலை 3ஆம் தேதி துவங்க உள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது.

இந்நிலையியல் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு குறித்த மனுவில், பொதுமக்களிடம் முறையாக அறிவிக்காமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், மீனவர்கள் கருத்தை கேட்காமல் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கடலுக்குள் பேனா சிலை வைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது என்றும், இயற்கைக்கு முரணானது என்றும் மீனவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் பேனா நினைவு சின்னம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்