உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு.! 2ஆம் நாள் விசாரணை தொடக்கம்.!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாம் நாளாக இன்று தொடங்கியது.
கடந்த வருடம் ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. நேற்று ஓபிஎஸ் தரப்பு வாதம் , இபிஎஸ் தரப்பு வாதம் கேட்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு தங்கள் இறுதி வாதத்தை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டதை அடுத்து இன்று 2வது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது.
இதில் முதலில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நேரம் இருந்தால் இன்றே இபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு செய்யப்பட்டு தீர்ப்பு தேர்வு குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் எனவும், இல்லை என்றால் நாளை அல்லது அடுத்த வரம் இபிஎஸ் தரப்பு வாதம் கேட்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது.